புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா கடந்த பல ஆண்டுகளாக மாறாத மண் பற்றுடன் செயலாற்றி வருவதை அனைவரும் நன்கு அறிவோம். அந்த வகையில், இவ்வாண்டின் ஆரம்பத்தில் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற புங்குடுதீவு பாடசாலைகளில் கல்வி கற்ற நாற்பது மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதியினை வழங்கினோம். சமூக ஒற்றுமை மற்றும் விளையாட்டுத்துறையினை மேம்படுத்துவதற்காக புங்குடுதீவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு இவ்வாண்டின் நடுப்பகுதியில் நிதி ஆதரவு வழங்கினோம். மூன்று கோடி ரூபாய் செலவில் "கள்ளியாறு" என்கின்ற பாரிய நன்னீர் சேமிப்புத் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கள்ளியாறு திட்டம் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம் என்கின்ற நிலையில், எங்கள் கிராமங்களில் கடும் வரட்சியின் காரணமாக ஆவினங்கள்(கால்நடைகள்)அவதிப்படுவதுடன் மட்டுமல்ல இறந்தும் போவதனை அறிய முடிந்தது. இந்த அவசர தேவையினை அறிந்து, சங்கம் 16 நடுத்தர வகைக் குளங்களை மேலோட்டமாக தூர் வாரி துப்பரவு செய்துள்ளது. துரிதமாக நடைபெற்ற இந்த செயற்பாடானது எங்கள் கிராமங்களில் வாழும் எம்மவர்க்கு மனமகிழ்வைத் தருவதாக அறிய முடிகிறது.
நிர்வாகம்
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
Join as a member or committee member with pungudutivu old school association. We are always waiting for your response.