covid 19 நிவாரணம்
கனடாவில் கால் நூற்றாண்டு காலமாக இயங்கிவரும் புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் Covid -19 தாக்கத்தினால் புங்குடுதீவு மக்கள் படும் அவல நிலையை உள்வாங்கி தொழில்களை இழந்து பாதிக்கப்பட்ட மிகவும் வறிய நிலையிலுள்ள 350 குடும்பங்களுக்கு சுகாதார அதிகாரிகளினதும் போலீஸ் அதிகாரிகளினதும் அறிவுறுத்தலின்படி உலர் உணவுப்பொதிகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டன. இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான முதற்கட்ட பங்களிப்பை கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் அனைவரும் இணைந்து ஏறக்குறைய மூன்றரை இலட்சம்(CAN $2850) வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலதிக பணம் தேவைப்பட்ட போது எமது சங்கத்துக்கு உதவிகளை வழங்கி வரும் வர்த்தக பிரமுகர் (747 Auto Parts ) திரு. துரைச்சாமி பூரணகுமார் ( CAN $2000) இணைந்து வழங்கியுள்ளார்.
புரவி புயல் இயற்கை அனர்த்தம்
covid 19 தாக்கம் ஒருபுறம் புறமிருக்க,புங்குடுதீவில் புரவி புயல் இயற்கை அனர்த்தம் புங்குடுதீவு மக்களின் நிலை குலையச் செய்தது. உடனடியாக எமது சங்கம் புரவி புயல் வெள்ள நிவாரண அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஊர் மக்களுக்கு எமது சங்கம் உணவு பொதிகள் வழங்க முடிவு முடிவெடுத்து நிவாரணப் உணவுப் பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. உலகம் பூராவும் Covid 19 தாக்கமும் இயற்கை அனர்த்தங்கள் என இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இங்கு கனடாவிலும் எமது உறவுகள் சொல்லெனாத் துன்பங்களுக்கு ஆளான பொழுதும் புங்குடுதீவு மக்களுக்ளின் அவல நிலையை அறிந்து உதவிய நல்லுள்ளங்களை புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் என்றும் என்றும் மறவோம்.
Join as a member or committee member with pungudutivu old school association. We are always waiting for your response.
Sponsor 2
Sponsor 1