ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2022
எங்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் பெருந்திரளான மக்களின் பேராதரவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மண்ணின் மீது கொண்ட பற்றும் அழியாத ஊரின் நினைவுகளுமாய் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் குளித்தார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வினை வெற்றிகரமாக்கிய அனைத்து உறவுகளிற்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும். தங்களின் பேராதரவே சங்கத்தின் எதிர்காலம் என்ற புரிந்துணர்வுடன் கலந்து நிகழ்வினை வெற்றிகரமாக்கியுள்ளார்கள்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அனைவருக்கும் நன்றி.
இந்நிகழ்விற்கான மைதான ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்த அனைத்து முன்னாள் சங்க உறுப்பினர்கள் மற்றும் சங்க ஆதரவாளர்களிற்கும் நன்றி.
மிகவும் கடினமான பணியான சமையல் பணியினை செய்து முடித்த சங்க ஆதரவாளர்கள், சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சுவைமிகுந்த தரமான உணவுகளைத் தயார் செய்து நிகழ்வினை வெற்றிகரமாக்கியுள்ளார்கள். காலை உணவினையும் தண்ணீர் வசதிகளையும் வழங்கி உபசரித்த சங்க அபிமானிகளிற்கும் நன்றி

சிறுவர்கள் தொடக்கம் முதியோர்வரை அனைவருக்குமான விளையாட்டுப்போட்டிகளைச் சீராக நடாத்த மைதானத்தில் நடுவர்களாகவும் ஒழுங்கமைப்பாளர்களாகவும் கடமையாற்றிய அனைத்து உள்ளங்களிற்கும் சங்க உறுப்பினர்களிற்கும் பாராட்டுகளும் நன்றியும்
உணவினை மிகவும் நேர்த்தியாக வழங்கி உபசரித்த அனைவருக்கும் நன்றி.
மேசை, கதிரை, பந்தல், ஒலிபரப்பு, மைதானத்தை சுத்தம் செய்த சிறுவர்கள், ஊடக நண்பர்கள், வாகன ஒழுங்குகளைச் செய்தவர்கள், வெற்றிக்கிண்ணங்களை வடிமைத்தவர்கள் என பல்வேறு வகையிலும் உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
இந்நிகவிற்கு ஆதரவு வழங்கிய வர்த்தக பெருமக்கள் மற்றும் பொருளாக உதவிய சங்க ஆதரவாளர்கள்
அனைவருக்கும் உளங்கனிந்த நன்றி.
நிர்வாகம், 2022
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா
மேலதிக புகைப்படங்கள் பார்வையிட
கீழ் உள்ள லிங்க்கை அழுத்தவும்