ஈழத்தின் சப்த தீவுகள் என்று அழைக்கபடும் தீவுகளில் இதுவும் ஒன்று. யாழ் மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட பிரிவுக்குள் வரையறுக்கப்படும் புங்குடுதீவு 18 கிலோமீற்றர் நெடுஞ்சாலையின் மூலம் யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள் முனைகள் அமையப்பட்ட தீவில் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். கிழக்கு மேற்காக 5.5 மைல்கள் நீளமும் வடக்கு தெற்காக 3 மைல்கள் அகலமும் கொண்ட ஒரு அழகிய தீவாகும்.இத்தீவு வாணர் பாலத்துடன் இணைக்கப்ட்டதன் காரணத்தால் யாழ்நகருடன் தரைவழியாக தொடர்பு ஏற்பட்டது. மேலும் குறிகட்டுவான் கழுதைப்பிட்டி போன்ற துறைமுகத்தின் ஊடாக ஏனைய தீவுகளுடன் கடல்வழி தொடர்பைக் கொண்டிருக்கிறது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, கடல்வளங்கள், மீன்பிடி என்பன இங்கு பிரதான வருமானம் பொறும் துறைகளாக காணப்படுகின்றது. இத்தீவு புங்கை மரங்கள் நிறைந்த காடாக இருந்தமையால் புங்குடுதீவு என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள புங்குடி என்ற ஊரை தொடர்புபடுத்தி பெயர் விளக்கம் கூறுவதுண்டு. மற்றுமொரு வரலாற்று விளக்கமும் இத்தீவின் பெயருக்கு உண்டு. தமிழ்நாட்டில் அன்னியர் படையெடுப்பில் மக்கள் இடம்பெயர்ந்து இங்குள்ள பூங்கொடித் தீவில் உள்ள மக்கள் வாழும் இடத்தில் தஞ்சமடைந்ததாகவும், இதை அவர்கள் பூங்கொடித் தீவு என அழைத்து பிற்காலத்தில் மருபி புங்குடுதீவு என பெயர்பெற்றதாகவும் ஒரு செவிவழி வரலாறு உண்டு. ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாக புங்குடுதீவு காணப்பட்டதால் இத்தீவை ஒல்லாந்தர் மிடில்பேர்க் எனப் பெயரிட்டனர். இத்தீவில் ஒல்லாந்தர் கடலில் எடுத்த சங்குகளை பதம் பிரித்து ஏற்றுமதி செய்த இடமாக உள்ள புங்குடுதீவின் ஒரு பகுதி இடம் சங்குமாவடி என பெயர் பெற்றதாக கூறுவர்.
The location of this site is given as Latitude : 9° 34′ 50 N and Longitude : 79° 51′ 20 E. As directions he states the site is on the eastern coast of Pungudutivu island.